எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஐம்பதாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது தொடர்பான தகவல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் கணிசமான அளவில் இராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.