“பொடி ஹாமுதுருவோ” என்று பிரபலமான கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கலபொட ஞானீஸர தேரர் நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த நிலயில் நேற்றைய தினம் காலமானார்.
இந்நிலையில், காலஞ்சென்ற கலபொட ஞானீஸர தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு, திங்கட்கிழமை (05) கொழும்பு கங்காராமய ஆலயப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, மதியம் 2.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை குறித்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்குமென அப்பகுதி வழியாக செல்லும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.