( ஐ. ஏ. காதிர் கான் )
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மோசடியான செயற்பாடுகள் இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, 03.08.2024 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களிலும் இதேபோன்று இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்காக, விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.