வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் 03.08.2024 இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும் நிகழ்வில் படையினர் நடத்திய பரசூட் சாகசத்தின் போது இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
ஒரு பரசூட் தரையிறங்கும் பகுதிக்கு அப்பால் சென்று மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளதுடன், மற்றொறு பரசூட் வேகமாக தரையில் விழுந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பரசூட் வீரர்களும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்தார்.