கொழும்பு : பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு 14 இல் அமைந்துள்ள கலை மகள் தமிழ் வித்தியாலயத்தில் 38 மில்லியன் ரூபாய் முதலீட்டில் புதிய மூன்று மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதில் எட்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு கேட்போர்கூட வசதிகள் உள்ளடக்கியதாக 240 குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டுமானத்திற்கு நிதியுதவியினை Nauzer Fowzie தலைமையிலான ஒரு முயற்சியால் Saeeda அறக்கட்டளை – துபாய் தாராளமாக அளித்திருந்தனர்.