மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த (31) வயதுடைய உதயகுமார் ஷங்கர் கணேஷ் சமீபத்தில் கொழும்பு தெஹிவளையில் நடந்த 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் முழு நேரத்தையும் உடற்கட்டை செம்மையாக்குவதற்கு செலவழிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியானது கடந்த 28.07.2024 திகதி நடைபெற்றது.
குறித்த போட்டியில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு அனைவரும் தங்களது உடல் கட்டமைப்புகளை முன்னிலை படுத்தினர்.
இதில் MEN PHYSIQUE மற்றும் 80 kg எடைப் பிரிவிற்கான “பாடி பில்டிங்” ஆகிய பிரிவுகளில் உதயகுமார் சங்கர் கணேஷ் சாதனை படைத்து முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
தற்போது இவர் நுவரெலியா பிரதான நகரத்தில் THE IRON KINGDOM உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிவிப்பாளராக கடமையாற்றி வருகிறார். சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடற்கட்டமைப்பு பயிற்சிகள் மூலம் இன்றுவரை பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான சாதனைகளை படைத்து ஆணழகன் போட்டியில் இவர் வாங்கிக் குவித்திருக்கும் பரிசுகளும், பதக்கங்களும் எண்ணற்றவை. உடற்பயிற்சி மூலம் கட்டுடலுடன் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.