பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள ‘ரிங் ஒப் பயர்’ எனப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.