கொழும்பு
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் செப்டம்பர் (29) காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றி சில மணித்தியாலங்களின் பின்னர் ரயில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.