கொழும்பு
பாலியல் குற்றச்சாட்டில் இருந்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தனுஷ்க குணதிலக்க நேற்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து வெளியேறினார்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.