இணையதளம் மூலம் தொடருந்து ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான கால எல்லை 01.08.2024 முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமைளாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 30 நாட்களுக்கு முன்னதாக தொடருந்து ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை 01.08.2024 முதல் நாளாந்தம் முற்பகல் 10 மணி முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த நடவடிக்கை இரவு 7 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.