எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.தனது எக்ஸ் தளத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,
”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு முதிர்ச்சியற்ற தீர்மானம் மேற்கொண்டுள்ளது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மிக முக்கியமான நேரத்தில் நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் தொடர்ந்து ஆதரிப்பேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.