இந்திய அரசின் மேலும் 300 மில்லியன் ரூபாய் உதவியுடன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால், குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏற்புடைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்காகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.