தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபாய் தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் 29.07.2024 எட்டப்பட்டுள்ளது.
தேயிலை பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக 2,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளது.