பேருவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காலவில பகுதியில் சொந்த காணியில் வீடின்றி பாதுகாப்பற்ற கொட்டகையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த குடும்பமொன்றின் வீட்டுத் தேவை குறித்து ஜெர்மனி கிங்ஸிங் கிரேஸ் மாநில சமூக சேவை அமைப்பின் இலங்கை இணைப்பாளர் பேருவளை இர்ஸான் மொஹம்மதின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் செய்த இர்ஸான் மொஹமட், குறித்த குடும்பத்தை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டதோடு அவர்களுக்கு உலருணவு பொதிகளையும் கையளித்தனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இர்ஸான் மொஹமட், அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி குடும்பம் காலவில பகுதியில் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நான் இங்கு வந்தபோது அறிந்துகொண்டேன். இந்த குடும்பத்தில் பாடசாலை செல்கின்ற இளம் சிறார்கள் இருப்பதை காண்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கிறது. இவர்களுக்கு எமது ஜெர்மனி பரோபகாரிகளின் நிதியுதவியில் வீடொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.