வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகக் கடமையாற்றிய சமிந்த அதுலுவாகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதன்படி அவர் தமது கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு காரணமாகத் தாம் பதவி விலகுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.