பொது போக்குவரத்தில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் லொறிகளில் 30 சதவீதம் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புகைப்பரிசோதனையின் போது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியாது எனவும், வாசனையை வைத்தே வாகனங்களை அடையாளம் காண முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு இரண்டு எண்ணெய் தாங்கிகளை தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள சட்ட அபராதங்களும் சிறியதாக இருப்பதால், இது கட்டுப்படுத்த முடியாத சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்