ஏ எஸ் எம் ஜாவிட்
கொழும்பு – அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை ரபிஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு தெமடகொடயில் அமைந்துள்ள பேரவையின் தலைமைக் காரியாலய ஏ.எம்.ஏ.அசீஸ் கேட்போர் கூடத்தில் பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட் தலைமையில் இன்று (28) சிறப்பாக இடம் பெற்றது.
இதன்போது நபியவர்களுக்காக குர்ஆன் புகழ்மாலை ஓதப்பட்டதுடன் , மெளலீது வைபவமும் இடம்பெற்றது.
இதன்போது மெளலவி இஹ்ஸான் அஹமடினால் (ஹுமைதி) நபியவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் காட்டித் தந்த நற்பண்புகள் அவர்களின் தியாகம் தொடர்பான விசேட உரை ஒன்றை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேரவையின் சமய விவகாரங்களுக்கான தலைவர் தெளபீக் சுபைர் , சிரேஸ்ட ஊடகவியலாளர் மொகமட் ரசூல் டீன், காலித் பாறுக் ,பேரவையின் அங்கத்தவர்கள் ,முன்னாள் தலைவர்கள் , உலமாக்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
தெவட்டகஹ தர்ஹா மற்றும் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ரபிஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மீலாத் விழா நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் நியாஸ் ஷாலி தலைமையில் இன்று (28) சிறப்பாக இடம் பெற்றது.
இதன்போது நபியவர்களுக்காக குர்ஆன் புகழ்மாலை ஓதப்பட்டதுடன் , மெளலீது வைபவமும் இடம்பெற்றது.
இதன்போது நபியவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் காட்டித் தந்த நற்பண்புகள் அவர்களின் தியாகம் தொடர்பான விசேட உரையும் இடம்பெற்றது
அதனைத் தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் , கலாநிதி ஹஸன் மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, உலமாக்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.