அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து கமலா ஹரிஸை தேர்தலில் களமிறக்கி தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கமலா ஹரிஸ் பிரசாரத்திற்கு ஆதரவும் நன்கொடைகளும் குவிந்து வருகின்ற நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அவருக்கு 81 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 677 கோடி ரூபா) நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கமலா ஹாரிசுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தைத் ஆரம்பிப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, ‘பைடன் ஹாரிஸ்’ பிரசாரக்குழு என்று இருந்த பெயர், தற்போது ‘ஹரிஸ் பார் பிரசிடென்ட்’ என்று மாற்றப்பட்டிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது