பாண் விலை குறைப்பு தொடர்பில் 26.07.2024 அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் விலை குறைப்பு தொடர்பில் 24.07.2024 விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாண் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து வெதுப்பக உற்பத்தியாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், விலை குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.