அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடுமையான அபாயங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்க தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த நஜித் சுமனசேன, டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இவ்வாறான அபாயகரமான நிலைமைகள் உள்ள பகுதிகளில் சுமார் 60 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.