இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் 23.07.2024 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரன, நுவான் துஷார, துஷ்மந்த சமீர மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான போட்டிகள் கண்டி பல்லேகலை மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாச ஆகிய விளையாட்டரங்குகளில் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.