ஏ.எஸ்.எம்.ஜாவித்
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவை (அ.இ.வை.எம்.எம்.ஏ.பேரவை) ஏற்பாடு செய்திருந்த டொக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தெமடகொடையிலுள்ள பேரவையின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் பேரவையின் தலைவர் இஹ்சான் ஏ ஹமீட் தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.முக்தார்இ திருகோணமலை கிளைகள் மற்றும் பேரவை ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
குறிப்பாக உதைபந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 30ம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 1ஆம் திகதி முடிவடையும். போட்டிகள் திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் நாடளாவிய ரீதியிலுள்ள கிளைகளுக்கிடையே நடைபெறவுள்ள டொக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவைத் தலைவர் இஹ்சான் அஹமட் ஹமீட் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் பேரவை தேசிய பொருளாளர் ரீ.டி.எம்.பிர்தெளஸ், தேசிய பொதுச் செயலாளர் ஆசிப் சுக்ரி , பேரவையின் ஊடகப் பொறுப்பாளரும் டைம்ஸ் இணையத்தள பிரதம ஆசிரியருமான மொஹமட் றசூல்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.