மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விமலசுரேந்திர, லக்ஸபான, நவ லக்ஸபான, கெனியோன் மற்றும் பொல்பிட்டிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.