ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பங்களிப்புடன் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணத்துக்கு மத்தியில் இந்த அலுவலகம் 17.07.2024 காலை திறந்து வைக்கப்பட்டது.
புத்தசாசனத்தைப் பாதுகாத்து முன்னெடுப்பது தொடர்பான அரசியலமைப்பு விதந்துரைகளுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.