என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேன் என நம்புவதாக முன்னாள் ரி20 அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) கண்டி பெல்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
”எந்தவொரு விளையாட்டு வீரருக்கும், எந்த மனிதனுக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் வரலாம். நான் அவற்றை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும். ஒரு வீரராக, எனக்கு வரும் சவால்களை விடமாட்டேன். இம்முறை போட்டியில் திறமை காட்ட முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.