கொழும்பு
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இவ்வருட மீலாத் நிகழ்ச்சிகளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை குருநாகல் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து நேரடியாக ஒலிபரப்புச் செய்கின்றது. பி.ப. 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம். ஜே. பாத்திமா ரினூஸியாவின் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பி.ப. 2 மணியளவில் “மண் பாடும் மா நபியின் பண்பாடு” எனும் பொதுத் தலைப்பில் விசேட கவியரங்கு நடைபெறும். கவியரங்கிற்கு கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமை தாங்குகிறார்.
கவியரங்கினை ஏ. எம். முஹம்மத் ரலீம் தயாரித்து வழங்குகின்றார்.
“மாநபிகள் அவதரித்த மக்கத்து மண்” என்று கல்ஹின்ன ஸிபானா ஸனூன்,
“தூதருக்குத் துயர் தந்த தாயிப்பின் மண்” என்று பொத்துவில் கிராமத்தான் கலீபா,” மா நபியை அரவணைத்த மதீனத்து மண்” என்று ஷினாஸ்- “காகிதம் அநாமிகா”, “பகை வென்று பலம் தந்த
பத்ர் களத்து மண் ” என்று என். நஜ்முல் ஹுசைன், “ஒப்பந்தம் தனைத் தந்த ஹுதைபியா மண்” என்று புத்தளம் மரிக்கார்,
“அண்ணலார் அகம் மகிழ்ந்த அறபாவின் மண்” என்று கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் ஆகிய கவிஞர்கள் கவிதை பாடுகின்றனர்.