ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூடி இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதுடன், சரத் பொன்சேகாவை பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கி தீர்மானம் எடுக்க தயாராகவுள்ளது எனவும் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகா, கட்சியையும் கட்சியின் தலைவரையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருவதால்,கட்சியின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தாம் தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.