சில்மியா யூசுப்.
கொழும்பு: கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் தனது 93வது தேசிய தினத்தை அதன் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அவர்களின் தலைமையில்
25ம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கோல் பேஸ் ஹொடலில்
கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக
சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதோடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இராஜாங்கத் திணைக்கள உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், உலமாக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் உரையாட்டிய
தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டினார். சவுதி அபிவிருத்திக்கான நிதியம் இலங்கையில் கிண்ணியா பாலம், கால்-கை வலிப்பு மருத்துவமனை, தேசிய அதிர்ச்சி மையம் மற்றும் பல திட்டங்களை நிர்மாணிப்பதற்கு உதவி வருவதாக அவர் நினைவு கூர்ந்தார்.
அத்துடன் அமைச்சர் நசீர் உரையாட்டுகையில், சவூதி அரேபியா நல்ல காலத்திலும் , கெட்ட காலத்திலும் இலங்கையின் நல்ல துணையாக இருந்ததாக தெரிவித்தார் . சவூதி அரேபியாவில் சுமார் 150,000 இலங்கைத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர், மேலும் தீவில் சில திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறதுஎனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.