இஸ்மதுல் றஹுமான்
ஜனாதிபதி தேர்தல் அக்டோபர் 16 ம் திகதிற்கு முன்பு நடாத்தியே ஆகவேண்டும். ஒத்தி வைக்க முடியாது. இதற்கு முன்பு நடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலும் எந்த வித ஒத்திவைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
வட கிழக்கில் யுத்த நிலமை ஏற்பட்ட போதும் தெற்கில் வன்முறைகள் கட்டவீழ்த்தப்பட்ட போதும் ஜனாதிபதி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படவில்லை என ஓய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகமும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மொஹமட் நீர்கொழும்பு, கம்மல்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
ஜனாப் மொஹமட் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
துர்அதிஷ்ட சம்பவமாக மாகாண சபை தேர்தல் மெளனிக்கப்பட்டுள்ளது. அதுபோல் உள்ளுராட்ச்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. அவை இரண்டும் இலங்கையிலுள்ள குறைந்த மட்டத்தினாலான சபைகள். அதனை அதற்கு மேலுள்ள பாரளுமன்றமும், நிரைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி அவர்களினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மாகாண சபை தேர்தல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் சரியான முறையில் நிரைவேற்றப் படாததினால் அது ஸ்தம்பித்துள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் நிதி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறாததினால் பிற்போடப்பட்டுள்ளது.
அவை இரண்டும் மேலுள்ள அதிகாரிகளுக்கு கீழ் இருக்கின்றன என்பதனால் பிற்போட முடியும். ஆனால் ஜனாதிபதி தேர்தல் உயர் அதிகார பீடத்திற்கான தேர்தல். அதற்கு மேல் அதிகாரபீடம் இலங்கையில் இல்லை என்ற காரணத்தினால் இதனை பின்போட முடியாது என்றே 30 வருடங்களுக்கு மேல் தேர்தல் திணைக்களத்திலும் தேர்தல் ஆணைக்குழுவிழுவும் கடமையாற்றியவன் என்ற முறையில் கருதுகிறேன்.
இதுவரையில் எந்த ஒரு ஜனாதிபதி தேர்தல்கள் பிற்போடப்படவில்லை. தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பாக அறிவித்ததன் பின் பிற்போட எந்த சட்ட ஏற்பாடுகளும் இல்லை. பிற்போட்டாலும் கூட குறித்த ஒரு மாத காலத்திற்குள் அதாவது அக்டோபர் 16ம் திகதிக்கு முன் நடாத்தப்படவேண்டும் என்றே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு காரணத்தினால், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு குறித்த தினத்தில் நடாத்தப்படாவிட்டாலும் 14 நாட்களுக்குள் அதுவும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாத காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு அது நடாத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 16ம் திகதிக்கு பின் நடத்த முடியாது. பதவிக்காலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மூன்று முறை தீர்ப்பு வழங்குயுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனால் பொருளாதார பிரச்சிணையோ மக்கள் பிரச்சிணையோ அவர்களுக்கு இல்லை .தேர்தலை நடாத்தும் கடப்பாடு அவர்களுக்கு உள்ளன.