நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.