லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை சிக்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த நிலையில் 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.