அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் 06.07.2024 ஆரம்பமானது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.