கொழும்பு – டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சித் தலைமையகத்திற்கு வருகைத் தந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை 05.07.2024 காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்படக்கூடும் எனக் கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கட்சித் தலைமையகத்திற்கு முன்பாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.