பாகிஸ்தானில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்குப் பஞ்சாப் மாகாணத்தில் தடை விதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகப் பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.