2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இதன்படி, கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின்படி, பல்கலைக்கழக அனுமதிக்கு நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி இன்றுடன் (05) முடிவடையவுள்ளது.
இதற்கமைய, www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு கூறியுள்ளது.
எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பல்கலைக்கழக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது