லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல் 05.07.2024 இரவு 09 மணியளவில் இடம் பெற்றதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பரவலில் குறித்த லயன் குடியிருப்பில் 05 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் நான்கு வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு மாத்திரம் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தினால் வீட்டில் இருந்த உடமைகள் சில தீக்கிரையாகிள்ளன.
பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.