(அஷ்ரப் ஏ சமத்)
கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து ஓர் சிறந்த நேர்மையான கடமையுணர்வுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தீபால் ரொஸான் குமார அவர் வீடு சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றது. குறிப்பிட்ட பரிசோதகர் அவ்விடத்திலே இறந்து கிடந்திருந்தார்.
ஆனால் இதுவரை அவரைக் கொலை செய்த குற்றவாளியை குற்றத்தடுப்பு பிரிவினர் அல்லது விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை
இக்கொலையை ஒப்பந்த அடிப்படையில் கொலைசெய்த சந்தேக நபர் கல்கிசை படோகிவிட்டப் பிரதேசத்தில் வைத்து 2200 கிராம் போதைப் பொருளுடன் கைது 22.06.2024 திகதி செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கல்கிசை பிரதான பொலிஸ் நிலைய அதிகாரி திலிப்பஸ் பெரேரா தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாணையில் சந்தேகநபரை மேற்கொண்டனர் அவ் விசாரணையின் போதே அவர் மேற்படி அல்பிட்டிய சுகாதாரப் பரிசோதகர் கொலையை ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்தவர் என தெரியவந்தது.
அத்துடன் அவருக்கு தங்குமிட வசதிகள் பல்வேறு இடங்களில் செய்தவர்கள் என 3 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபரை மேலும் மேலதிக விசாரணைகளின் போது பெக் பெக் ரக 9 எம்.எம். அமெரிக்கா தயாரிப்பிலான பிஸ்டல்கள் இரண்டு அதற்குரிய ஜன்னங்கள், அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.இக் கொலைக்கு பயன்படுத்திய இத்தாலி உற்பத்தி இரண்டு மோட்டார் பைசிக்கள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்விடயமாக மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எச்மாரப்பன, தலைமையில் இன்று 04.07.2024 கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து இக்குற்றத்படுப்புக்கு பாவிக்கப்பட்ட ஆயுதங்களை பரிசிலீத்தார். அத்துடன் கல்கிசை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன பிரத்மனகே , உதவிப் பொலிஸ் அதிகாரி ரொஹான் புஸ்பகுமார, கல்கிசை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொறுப்பதிகாரி திலிப்பஸ் பெரேரா மற்றும் கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பிரசன்னமாகியிருந்தனர்
மேலும் . மேற்படி சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலீஸ் பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். இவ் விசாரணையின்போது வீரசேகர பொ.கொ.105086. தக்சான் 105087 சந்துர 34270 குமார 93293 பியசிரி 25426, ஆகியோர் பொலிஸார் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.