The Traveler Global நிறுவனமானது தங்களது ஓய்வு மற்றும் விசா செயல்பாட்டிற்கான விரிவாக்கப்பட்ட அலுவலகத்தினை இன்று, ஜூலை 3, 2024 புதன்கிழமை மக்கள் பூங்கா வளாகத்தில் திறந்துள்ளது. புதிய அலுவலகம் விசாலமானது மற்றும் பயணத் துறையின் புதிய போக்கு மற்றும் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. “எங்கள் மதிப்புமிக்க புரவலர்களுக்கான வசதி, தனியுரிமை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவை ஆகியவை எங்கள் முக்கிய நோக்கங்கள்” என Mr. Rifard Rizmi (பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி) தெரிவித்தார்.
விரிவாக்கப்பட்ட அலுவலக வளாகத்தை பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரியின் தாயார் Mrs. Fazeena Rizmi திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தலைவர்/நிர்வாக பணிப்பாளர் Mr. Rizmi Reyal, கிளை அலுவலகங்கள் மற்றும் Traveller Global குடும்பத்தின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
நலம் விரும்பிகள், விமான நிறுவனத்தைச் சேர்ந்த சக ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயணத் துறையின் புரவலர்கள் ஆகியோர் The Traveller Global நிறுவனத்தின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொண்டு கௌரவித்தனர். மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் புதிய விரிவாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் வசதிகள் குறித்து பாராட்டியிருந்தனர்.