கொழும்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது.
இதனை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவிற்கு செப்டம்பர் (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.