குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு பயணித்த படகொன்று கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவிற்கு கருங்கற்களை படகில் ஏற்றிச் சென்ற போது 02.07.2024 இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .
விபத்தின் போது படகில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்தவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.