நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று குலுங்கியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஸ்பெயின் தலைநகரில் இருந்து உருகுவே தலைநகருக்கு புறப்பட்ட ஏர் யூரோபா விமானம் ஒன்று பிரேசில் விமான நிலையம் ஒன்றில்
அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியுள்ளதை உறுதி செய்துள்ள ஏர் யூரோபா காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.