லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருத்தம் செய்யப்பட்ட சமையல் எரிவாயு விலை 02.07.2024 முற்பகல் அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் இறுதியாக கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி விலை திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.
இதன்போது, 12.5 கிலோகிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் தற்போது 3,790 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர 5 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டன.
இதற்கமைய, 5 கிலோ கிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 1,522 ரூபாவாகவும் 2.3 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் 712 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.