ஏ.எஸ்.எம்.ஜாவித்
மீட்ஸ் நிறுவனத்தினருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை, செப்டம்பர் 20 திணைக்களத்தில் இடம் பெற்றது.
இதன்போது இனிவரும் காலங்களில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு திணைக்களத்துடன் இணைந்து பள்ளிவாசல் நிருவாக நடவடிக்கைகளை சிறப்பாக கொண்டு செல்லும் வகையில் வழகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டன.
இதன்போது திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல்இ உதவிப்பணிப்பாளர் அலா அஹமட்இ நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மீட்ஸ் நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.சி.எம்.முனீர்இ ஏ.எஸ்.எம்.இல்யாஸ்இ எம்.ஏ.எம்.அஸ்மீர் அலிஇ அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹஸன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைப்பின் உறுப்பினர் இல்யாஸ் அவர்களினால் பணிப்பாளருக்கு மீட்ஸ் அமைப்பின் வழி காட்டல்கள் தொடர்பான இரண்டு கையேடுகளும் கையளிக்கப்பட்டன.