அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
30.06.2024 அதிகாலை 6.00 மணியளவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரபிக் கடல் பகுதியில் உள்ள நெடுநாள் மீன்பிடி மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளமை காரணமாக அரபிக் கடல் பகுதியில் கடும் காற்று (70-80 kmph) நிலவும் என்று திணைக்களம் குறிப்பிடுகிறது.
இதனால் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.