எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துக் கட்டணத்தை 5 வீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சப் பேருந்து கட்டணம் 28 ரூபாவாகக் குறைக்கப்படும் என்றும் இந்த கட்டணத் திருத்தம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்திற்கு அமைய பேருந்துக் கட்டணங்களை திருத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் போக்குவரத்து அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் கலந்து கொண்டது.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் பேருந்துக் கட்டணத்தை ஐந்து வீதத்தினால் குறைப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.