முட்டை உற்பத்தியை அதிகரிக்கப் புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும் எம்மால் தன்னிறைவு அடைய முடியவில்லை.
2021ஆம் ஆண்டு உரப் பிரச்சினையால் கால்நடைத் தீவனமான, சோள உற்பத்தி குறைந்ததால் கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்