லோட்டஸ் வீதியில் நடந்த ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் – அதிபர்கள் ஒன்றிணைந்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக 26.06.2024 ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டம் காரணமாக ஓல்கொட் மாவத்தை, லோட்டஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.