அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் செப்டம்பர் 20 ஆம் திகதி இரவு 11.15 மணி அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு பயணித்த நால்வரில் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து, இதற்கு முன்னரும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்தில் 20திற்கும் மேற்பட்ட T56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.