6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்கப்படாமையினால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.