அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் மற்றும் அக்கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
22.06.2024 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, இலங்கையை முற்போக்கான நாடாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அருண் சித்தார்த் பெரும் சேவையை ஆற்றுவார் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இலங்கைக்குள் அவரது குரல் உரக்க ஒலிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக திலித் ஜயவீர தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அருண் சித்தார்த், இந்த வாய்ப்புபை பெற்றுக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
“நான் எப்பொழுதும் தேசியவாதக் கருத்துக்களையே கொண்டிருந்தேன். ஒரு இலங்கையனாக, இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன். நான் தமிழனாக இருக்கலாம், இன்னொருவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது சிங்களவராக இருக்கலாம். இது எனது நாடு. இந்த நாடுதான் எனக்கு கல்வியை கொடுத்தது. இந்த நாடுதான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அதனால் இந்த நாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். எனவே எனது சித்தாந்தத்துடன் பொருந்தக்கூடிய ஒரு முகாமைத் தேடிக்கொண்டிருந்தேன். அதனால் இந்த முகாமை தெரிவு செய்தேன். என்றார்.